அறிமுகம். அழகு தமிழின் வட்டார தமிழ் அடையாளங்களில் ஈழத்தமிழின் பொலிவும் அழகும் மிகவும் அற்புதமானதொன்று. தூய தமிழ் வடிவம் மருகிக் கொண்டு வரும் இன்றைய கால கட்டத்தில் இன்று வரை தூயதமிழின் பெரும்பான்மையான வார்த்தைகளை பேசு தமிழாக கொண்டவர்கள் என்ற பெருமை நமது ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறது. முக நூலில் கிட்டத்தட்ட 50 நாட்கள் தொடர்ந்து தினம் ஒரு ஈழத்து தமிழ் சொல் என்ற தலைப்பில் நமது பேச்சுவழக்கு தமிழ் வார்த்தைகள் பற்றிய விளக்கங்களுடன் தொடராக எழுதி வந்தேன். இடையில் வந்த பல தடங்கல்களால் எழுதுவது தடைபெற்றுவிட்டது. தடைபெற்ற தொடரை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்ச்சி தான் இந்த வலைப்பூ. வழமை போல் தமிழ் பேசும் நல்லுள்ளங்களும் தமிழ் விரும்பும் ஆர்வலர்களும் தங்கள் ஆதரவை நல்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.
தினம் ஒரு ஈழத்து தமிழ் சொல்